துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கீரீஸ் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
துருக்கியில் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாகக் குடியேறி வருகின்றனர். பெரும்பாலௌம் இவர்கள் தேர்வு செய்வது கிரீஸ் நாடு ஆகும். அப்படி இவர்கள் செல்வதற்கு ஆபத்தான கடற்பகுதியை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில், ஏஜியன் படலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில், 80 பேர் பயணம் செய்த நிலையில், இதில், 29 பேரை கடலோரக் கடற்படை மீட்டுள்ளதாகவும், 50 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.