கண்ணு சிவந்தா.. கோவத்தின் அறிகுறி இல்ல; கொரோனாவின் அறிகுறியாம்!!

வியாழன், 26 மார்ச் 2020 (16:17 IST)
இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கண்கள் சிவப்பதும் கொரோன அறிகுறி என கூறப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,304 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்நிலையில், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கோரனாவில் அறிகுறிகள் என கூறப்பட்டு வந்த நிலையில், கண்கள் சிவப்பதும் கொரோனாவின் அறிகுறி என American Academy of Ophthalmology தகவல் தெரிவித்துள்ளது. 
 
ஆம், கண்கள் சிவந்தும், கண்களில் அழுக்கு வெளியேறியபடி வெண்படலம் படர்ந்த அறிகுறிகளுடன் 1 முதல் 3% மக்கள் கொரோனா தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். எனவே கண்களையும் கவனித்துகொள்ள வேண்டிய கடமை தற்போது மக்களுக்கு உருவாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எந்தெந்த கடைகள் எத்தனை மணி வரை செயல்படும்? – அரசு அறிவிப்பு