கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த நிலையில் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட8 பேருக்கும் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்கள் தூக்கு தண்டனைகளில் இருந்து தப்பித்துள்ளது ஆறுதலை தந்தாலும் அவர்கள் இந்தியா திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 இந்தியர்கள் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 8 பேரும் இந்திய கடற்படையில் 20 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்கள் என்று மேல்முறையீட்டில் வாதாடிய நிலையில் தற்போது அவர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது