Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெர்சன் நகரிலிருந்து ராணுவத்தினர் வெளியேற புதின் உத்தரவு

Advertiesment
ரஷிய ராணுவத்தினர்
, வியாழன், 10 நவம்பர் 2022 (21:37 IST)
உக்ரைன் நாட்டில் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய நிலையில் அங்கிருந்தது வெளியேறும்படி ரஷ்ய ராணுவத்தினருக்கு புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஒன்பது மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.

இதற்கு  ஐ நா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான தீர்மானம்   ஒன்று ஐநாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் 4 பகுதிகளை மீட்க உக்ரைன் போராடி வரும் நிலையில், சமீபத்தில் புதின் அப்பகுதிகளில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

மேலும், ஆக்ரமிப்பு பகுதியான கெர்சனில் பொதுமக்களை வெளியேறும்படி அதிகாரிகள் கூறி வந்ததுடன், அப்பகுதியில், மின் சாரம், நீர்  உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள்  துண்டிக்கப்பட்டன.

இதுகுறித்து, உக்ரைன் அரசு, மேற்கூறியவற்றைக் கூறியதுடன், மக்களின் வீட்டுகளில் புகுந்து பொருட்களைப் பறிப்பதாகவும்  குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ராணுவத்தினரை வெளியேறும்படி ரஷிய அதிபர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, விரைவில் உக்ரைனுடனான போர்  முடிவடைய வேண்டுமென மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து அமைச்சர் வில்லிம்சன் ராஜினாமா! பிரதமர் ரிஷி சுனக் பதவிக்கு ஆபத்தா?