Publish Date: Mon, 22 Aug 2016 (13:40 IST)
Updated Date: Mon, 22 Aug 2016 (13:44 IST)
கொலம்பியாவில் உள்ள சிறைச்சாலையில், கைதிகளின் காதலை சேர்த்து வைக்கும் விதத்தில் அவரவர் காதலியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கொலம்பியாவில் உள்ள காலீல் பகுதியில் இருக்கும் கார்செல் வில்லா ஹெர்மோசா என்ற சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அதில் 17 கைதிகளுக்கு, அவர்கள் நீண்ட காலமாக நேசித்து வந்த பெண்களுடன் திருமணம் நடைப்பெற்றது. சிறையில் சமூக பணியாக கருதி இந்த திருமணத்தை சிறை அதிகாரிகள் நடத்தி வைத்தனர்.
திருமணம் மூலம் தண்டனை அனுபதித்த ஆண்கள் சமூகத்தில் மீண்டும் தவறு செய்யாமல் ஒன்றிணைந்து வாழ முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.