Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க ஒரு இடத்துல அடிச்சா, நாங்க 52 இடத்துல அடிப்போம்! – ட்ரம்ப் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (09:14 IST)
அமெரிக்கா ஈராக் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய நிலையில் மேலும் தாக்குதல் நடத்துவோம் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமானநிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி மற்றும் துணை ராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான், ஈராக் அரசுகளும் வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்து வருகின்றன.

இதற்கு பதலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ”பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்கா சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த போவதாக பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் ஈரானின் முக்கியமான 52 இடங்களில் தாக்குதலை நடத்துவோம்” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான வெளிப்படையான இந்த தாக்குதல் அறைகூவல் உலக நாடுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

பஹல்காம் தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட் ராணுவ தளபதி ஆசிம் முநீர் தான்.. பாக் முன்னாள் மேஜர் அதிர்ச்சி தகவல்..!

இந்தியர்களின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதில்லை.. அது Spam போன்றது” - நியூசிலாந்து அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments