சூரியனில் ஓம் என்ற சத்தம் கேட்பதாக கிரண்பேடி பகிர்ந்துள்ள வீடியோவுக்கு கிண்டலான பதிலை அளித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சூரியனின் சத்தத்தை நாசா ரெக்கார்ட் செய்துள்ளதாகவும், அந்த சத்தம் ஓம் என்ற ரிங்காரமாய் கேட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்யும் வகையிலான பதிவுகளை இட்டு வருகின்றனர். சிலர் காற்று இல்லாத இடத்தில் ஓசை எழாது என்றால் சூரியனிலிருந்து எப்படி சத்தம் வரும்? என்று லாஜிக்கான கேள்விகளையும் கேட்டுள்ளனர். இந்நிலையில் கிரண் பேடியின் பதிவை ரீ ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் ”வாட்ஸ் அப்பிலிருந்து சன் – கீ” என குறிப்பிட்டுள்ளார்.
இணைத்து படித்தால் சங்கீ என்னும் அர்த்தம் தரும்படி வேண்டுமென்றே கிண்டல் செய்யும் தோனியில் அவர் பேசியுள்ளதாக பேசி கொள்ளப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இது வாட்ஸ் அப்பில் நெடுநாட்களுக்கு முன்பே பரவிய வீடியோ என்றும் சிலர் கூறியுள்ளனர்.