Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள்: ராணுவத்திற்கு அதிபர் ரணில் உத்தரவு

Advertiesment
Ranil Wickramasinghe
, புதன், 13 ஜூலை 2022 (18:53 IST)
இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள் என ராணுவத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கு புகழ்ந்து சூறையாடி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இலங்கையில் தற்போதைய நிலையை கட்டுப்படுத்த முப்படைகளின் தளபதிகள் காவல்துறை தலைவர் அடங்கிய குழுவை செயலதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார் 
 
அதிபர், பிரதமர் அலுவலர்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் உடனடியாக சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையை மீட்டுத்தாருங்கள் என ரணில் விக்ரமசிங்கே இராணுவத்திடம் கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென் மாவட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றமா?