நடிகைகளும், மாடல் அழகிகளும் தங்களுடைய அழகை மெரூகூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது வழக்கம்தான். ஆனால் அதே நேரத்தில் அந்த சிகிச்சை ஒருமுறை நடத்தலாம், இருமுறை நடத்தலாம், 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் என்ன ஆகும், உயிர் போகும். அப்படி ஒரு நிலைமைதான் கனடாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த கிறிஸ்டினா மார்ட்டெல்லி என்ற மாடல் அழகி தனது 17 வயது முதல் உடலின் ஒவ்வொரு பாகமாக அவ்வப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். சில சமயம் திருப்தி இல்லாததால் ஒரே பாகத்தில் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். பெருத்த மார்பகம், சிறுத்த இடை, பருத்த பின்புறம், வள வளப்பான தொடைகள், சுண்டியிழுக்கும் உதடு, மின்னும் மூக்கு, ஜொலிக்கும் கண்கள் ஆகிய உறுப்புகளில் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
இதனால் அவருடைய அழகு மெருகேறி கொண்டே வந்த நிலையில் இவருக்கு ஆபாச படங்களிலும் வாய்ப்பு வந்தது. இதனால் இவருடைய சம்பளம் சர்வசாதாரணமாக கோடியில் கிடைத்தது. இந்த நிலையில் கடைசியாக தனது பின்புறத்தை பெரிதாக்க ஒரு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் இந்த அறுவை சிகிச்சையின்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருடைய மறைவு கனடாவில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.