Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெயிலில் தானாக பொறிந்த முட்டை; வெளியே வந்த கோழிக்குஞ்சி

Advertiesment
வெயிலில் தானாக பொறிந்த முட்டை; வெளியே வந்த கோழிக்குஞ்சி
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (20:45 IST)
திருநெல்வேலியில் வெயிலின் வெப்பம் காரணமான முட்டை பொறிந்து குஞ்சு வெளியே வந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கடையில் வைத்திருந்த கோழி முட்டை வெப்பத்தில் தானாக பொறிந்து, அதிலிருந்து கோழி குஞ்சி வெளியே வந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இதுகுறித்து அந்த உரிமையாளர் கூறியதவது:-
 
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் ஆம்லேட் விற்பனை மந்தமாக உள்ளது. அதனால் கடையில் நாட்டு கோழி முட்டைகள் அதிக அளவில் தேக்கமடைந்து விட்டது. திடீரென முட்டை வைக்கப்பட்டிருந்த இடத்தில் கோழி குஞ்சுகளின் சத்தம் கேட்டது. என்னவென்று சென்று பார்த்தேன்.
 
முட்டையில் இருந்து கோழி குஞ்சுகள் வெளிவந்தது தெரிந்தது. 3 முட்டைகள் இதுபோல தானாக பொறிந்து அதிலிருந்து கோழி குஞ்சுகள் வெளிவந்தது. இதனை பொதுமக்கள் அதிசயமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் கவர்ச்சி; நடிகைக்கு தடை விதித்த அரசு