பிரார்த்தனைக்கு கிளம்பிய போப் ஆண்டவர் லிஃப்டுக்குள் சிக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரோமில் உள்ள வாடிகன் சிட்டியில், அப்போஸ்தல மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் போப் ஆண்டவரின் பிரார்த்தனை நடத்துவார். போப்பின் பிரார்த்தனைக்காக புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்காணோர் கூடுவர்.
இந்நிலையில் தற்போது போப் ஆண்டவராக இருக்கும் பிரான்சிஸ், பிரார்த்தனை கூடத்திற்கு வருவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால் அவர் 7 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். பின்பு அவர் மக்களிடம் “தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள், நான் 25 நிமிடங்களாக லிஃப்டுக்குள் சிக்கிக்கொண்டேன். என்னை தீயணைப்பு படையினர் மீட்டனர்” என கூறினார். இதனால் சிறுது நேரம் மக்களிடையே ஆரவாரம் ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கபட்டதால் லிஃப்டுக்குள் போப் சிக்கி கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.