Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஏ.. எப்புட்றா..?” கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தை பெற்ற பெண்! – நடுவானில் ஆச்சர்யம்!

Advertiesment
Flight
, வியாழன், 15 டிசம்பர் 2022 (09:32 IST)
ஈகுவாடார் நாட்டிலிருந்து விமானத்தில் பயணித்த பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈகுவடார் நாட்டில் இருந்து நெதர்லாந்து தலைநகர் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் தமாரா என்ற பெண் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவர் வயிறு வலி ஏற்பட்டு துடித்துள்ளார். அவர் அலறி துடித்ததும் சுற்றி இருந்தவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.

உடனே பயணிகளில் ஒருவரான மாக்சிமிலியானா என்ற பெண் உடனே அவரை கழிவறைக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை சோதனை செய்ததில் தமாரா கர்ப்பமாக இருப்பதும், குழந்தை பிரசவிக்க உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையறித்து தமாராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஏனென்றால் அவர் கர்ப்பமாக இருப்பது அவருக்கே தெரியாதாம்.

மாக்சிமிலியானா மற்றும் விமானத்தில் பயணித்த சில டாக்டர்கள் உதவியுடன் தமாரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் இறங்கியதும் அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர். தனக்கு உதவிய மாக்சிமிலியானாவின் பெயரையே குழந்தைக்கு சூட்டியுள்ளாராம் தமாரா.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழையா?