Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாளத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறதா? நாட்டை விட்டு வெளியேற பிரதமர் திட்டம்?

Advertiesment
நேபாளம்

Siva

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (18:09 IST)
நேபாளத்தில் திடீரென வெடித்த அரசியல் புரட்சி மற்றும் கலவரங்களால், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து இளைஞர்கள் மத்தியில் போராட்டம் வலுத்தது. பிரதமரின் வீடுகள், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில், ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், பிரதமர் சர்மா ஒலி உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தற்போது, பிரதமர் மற்றும் அமைச்சர்களை ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. நேபாள பிரதமர் இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அரசியல் பதற்றம் காரணமாக நேபாளத்தில் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானார்.. தேமுதிக இரங்கல்..!