பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் திவ்யா சத்யராஜ், இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை அளித்து வந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியராக வாழ்ந்து வருகிறார்.
தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியிருந்த அவர் திமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி திமுக சம்மந்தப்பட்ட மேடைகளில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக, விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினரை விமர்சித்துப் பேசி வருகிறார்.
அதேபோல சமூகவலைதளங்களில் சமூகநீதி மற்றும் பெரியாரியம் ஆகியவற்றைத் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் திவ்யா தன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர அதில் ஒரு நபர் “அறிவும் அழகும் நிரம்பிய கவுண்டச்சி” என சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்ய, அந்த பாராட்டை பெற்றுக் கொள்ளும் விதமாக ஸ்மைலி ஒன்றை அவர் பதிலளித்தார். திவ்யாவின் இந்த செயல் சமூகவலைதளங்களில் கண்டனம் பெற்றுள்ளது.