Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய மூடிட்டு சும்மா இருங்க... கண்டதை அசிங்கப்பட்ட ட்ரம்ப்!!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (17:54 IST)
ட்ரம்பின் சர்ச்சை பேச்சை காவல் அதிகாரி ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.
 
அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஆளுநர்களை சாடியுள்ளார். கலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்த தவறியதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தை கூட களம் இறக்குவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என தெரிவித்தார். 
 
ட்ரம்பின் இந்த பேச்சை காவல் அதிகாரி ஒருவர் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, அதிபரால் ஆக்கப்பூர்வமாக ஏதும் செல்ல இயலவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். அது ஆதிக்கம் செலுத்தும் நேரமில்லை. 
 
இந்த நேரத்தில் பலத்தை காட்டுவது தலைமைக்கு அழகல்ல. இது ஹாலிவுட் படம் அல்ல நிஜ வாழ்க்கை என கடுமையாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments