Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!
, செவ்வாய், 2 ஜூன் 2020 (08:13 IST)
ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை
அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை அந்நாட்டு போலீசார் கழுத்தை காலால் நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது 
 
முதலில் மின்னபொலிஸ் நகரில் மட்டும் வெடித்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவி விட்டதாகவும் இந்த வன்முறையை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் அமெரிக்க அரசு திணறி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கருப்பின மக்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் அமெரிக்க போலீஸ் அதிகாரி மிதித்ததால் ஜார்ஜ் பிளாய்ட் இறக்கவில்லை என்றும் அவருக்கு ஏற்கனவே இதய நோய் இருந்ததாகவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது. இந்தநிலையில் ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையை தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஜார்ஜ் பிளாய்ட் இறப்பு என்பது ஒரு இனப்படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார் 
 
ஜார்ஜ் பிளாய்ட் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை நெறித்ததால், மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு அவரால் மூச்சு விட முடியவில்லை என்றும் அவருக்கு இதற்கு முன்னர் இதயநோய் இருந்ததாக எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றும் எனவே இது முழுக்க முழுக்க ஒரு இனப்படுகொலை தான் என்றும் அவர் தனது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கையால் வன்முறை மேலும் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

63 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அடங்காத கொரோனாவால் அதிர்ச்சி