Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்கும் டிவிட்டர்! ட்ரம்ப்பின் டிவிட் தூக்கல்!

அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்கும் டிவிட்டர்! ட்ரம்ப்பின் டிவிட் தூக்கல்!
, செவ்வாய், 2 ஜூன் 2020 (07:11 IST)
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீஸாரால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் உருவாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போலீசார் அவரை கீழே தள்ளி கழுத்தில் காலால் நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமாக வீடியோ ஒன்று பரவி உலகெங்கும் கண்டனங்களைப் பெற்றது. இதனையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் கணவரின் செயல் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்டக்காரர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘கலைந்து செல்லவில்லை என்றால் சுடப்படுவீர்கள்’ என்று டிவீட் செய்ய, அது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தங்கள் முகப்புப் புகைப்படத்தை கருப்பு நிறத்தில் மாற்றி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் 5 பணிமனைகளில் இருந்து 148 பேருந்துகள் இயக்க முன் ஏற்பாடுகள் தீவிரம்