பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் அவையின் பொது அமர்வில் பங்கேற்க போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த மாத இறுதியில் ஐ.நா. பொதுக் கூட்டத்தின் 80வது அமர்வு நடைபெற உள்ளது. பொதுவாக, இந்த அமர்வில் உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்களால் இரு நாடுகளின் உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பயணத்தை ரத்து செய்த நிலையில், இப்போது பிரதமர் மோடியும் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.
பிரதமர் மோடிக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் உரையாற்றுவார்.