இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், டுவிட்டர் அதிபர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்..
அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, உலகின் பெரும் பணக்காரரும், டுவிட்டர் மற்றும் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.
மேலும், அங்குள்ள நோபல் விருது பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், மேதைகள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரையும் அவர் சந்திக்கவுள்ள கூறப்படுகிறது.