Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் பைடன் ராணுவ வீரர்களுடன் செல்ஃபி...

jo biden with japan soldiers
, வியாழன், 18 மே 2023 (21:57 IST)
ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ராணுவ வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

ஜப்பான் நாட்டில் பியூமோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், ஜி-20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு இன்று சென்றடைந்தார் என்று வெள்ளை மாளிகையில் வரும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா சென்ற அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்கள், வீராங்கனைகளுடன் ஜோ பைடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும், இப்பயணத்தில், உக்ரைனுடனான ரஷியாவின் போர், அணு ஆயுதம் பயன்பாட்டைக் குறைப்பது, ஏஐ என்ற செயற்கை தொழில் நுட்பம், பருவ நிலை மாற்றம், பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றை ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியுடன் சண்டை....பல்கலைக்கழக மாணவர் எடுத்த விபரீத முடிவு