ஜெர்மனியின் முனிச் நகரில் உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா துவங்கியுள்ளது. இந்த திருவிழாவிற்கு அக்டோபர் பெஸ்ட் என அழைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கிய இந்த பீர் திருவிழா அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஜெர்மெனியில் கொண்டாடப்படுகிறது.
இதில் உலகம் முழுவதிலுமிருந்து 60 லட்சம் மது பிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக புதிய ஆப் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆப் பீர் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களை தெரியப்படுத்தும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பீர் விலை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பீர் ரூ.835-க்கு கிடைக்கும்.