Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: 38 பேர் உயிரிழப்பு! 29 பேர் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம்..!

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்து: 38 பேர் உயிரிழப்பு! 29 பேர் காயமின்றி உயிர் தப்பிய அதிசயம்..!

Siva

, வியாழன், 26 டிசம்பர் 2024 (07:45 IST)
கஜகஸ்தான் நாட்டில் நடந்த விமான விபத்தில் 38 பேர் பலியான நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பி உள்ளதாகவும், அதில் ஒரு சிறுவன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று 62 பயணிகள் மற்றும் ஐந்து விமான பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென  பறவைக் கூட்டம் விமானத்தில் மோதியதாகவும், இதனால் விமானத்தின் திசை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தை கீழே இறக்க பைலட் முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தாறுமாறாக பறந்து, விமான நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரையில் உள்ள நிலப்பகுதியில் வலது பக்கம் சாய்ந்த நிலையில் தரையில் மோதி இறங்கியது.

இதில், விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அவசர கால கதவு வழியாக பயணிகள் வெளியேறினர். உடனடியாக மீட்பு குழுவினர் பயணிகளை வெளியேற்ற உதவிய நிலையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 38 பேர் பலியாகினர். மேலும், 11 வயது சிறுவன் உள்பட 29 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்ததாகவும், சிலருக்கு மட்டும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?