Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகள்: பயணிகள் அதிர்ச்சி

Advertiesment
Flight
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:45 IST)
நடுவானில் திடீரென இரண்டு விமானிகள் அடிதடி சண்டையில் ஈடுபட்டதால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சமீபத்தில் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தை 2 விமானிகள் இயக்கினார்கள் 
 
நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்த நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இரண்டு விமானிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர் 
 
விமான ஊழியர்கள் சமாதானபடுத்தினாலும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனையடுத்து விமானம் பெரும் பரபரப்புக்கு இடையே பத்திரமாக பாரிசில் தரையிறங்கியது. இதுகுறித்து விசாரணை செய்த விமான நிறுவனம் இரண்டு விமானிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி!