Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள பிலிப்ஸ் நிறுவனம்!

Advertiesment
Phillips
, திங்கள், 30 ஜனவரி 2023 (19:01 IST)
பிலிப்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் உள்ள 6000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம்மை தலைமையிடமாகக் கொண்டு பிலிப்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு  நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் அமேசான், டுவிட்டர், மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள்  ஆயிரக்கணக்கில்  பணி  நீக்கப்பட்ட நிலையில், தற்போது, பிலிப்ஸ் நிறுவனத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் நிறுவனத்தில் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் 6000 ஊழியர்களை பணி நீக்கவுள்ளதாகவும், இது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 5% எனக் கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் இரண்டு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!