Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசானை அடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப் : 2023 மோசமான ஆண்டா?

Advertiesment
Microsoft
, புதன், 18 ஜனவரி 2023 (09:53 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பமே மோசமான ஆண்டாக உள்ளது என்று கூறப்படுகிறது. 
 
உலகளாவிய பண வீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஏற்கனவே கூகுள் ட்விட்டர் ஃபேஸ்புக்  ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக சமீபத்தில் அமேசான் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது. 
 
இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா!