Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ரத்த தானம் செய்ய’ ஆர்வத்துடன் குவியும் மக்கள் !

Advertiesment
’ரத்த தானம் செய்ய’ ஆர்வத்துடன் குவியும் மக்கள் !
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (16:03 IST)
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று தேவாலயத்திலும், பிரபல நட்சத்திர விடுதியிலும் தொடர் குண்டுவெடித்தது. இதில் மக்கள் பலர் பலியாகினர். தற்போது வரை 290 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 
 
இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேனா. இன்று நள்ளிரவு முதல் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இந்த அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்தெரிவிக்கின்றன.
 
மீண்டும் தாக்குதல் நடதப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்கவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் கடலோர காவல்படையினர்.
 
இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க அங்குள்ள அருத்துவமனைகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
 
மேலும் ரத்தப்பற்றாக்குறை உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை தேசிய ரத்த தான சேவை மையமானது தனது பேஸ்புக் பக்கத்தில் ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தானம் செய்யலாம் என்று பதிவிட்டிருந்தது. இந்தப் பதிவு வைரலாகியது.
 
இதைப் பார்த்த மக்கள் பலர் கூட்டமாகச் சென்று ரத்த வங்கியில் ரத்த தானம் செய்ய வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்ட்டிக்கு வராத பாட்டியை பாடியாக்கிய பேரன்!!!