Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானத்திலும் ஸ்டாண்டிங்: பாக்கிஸ்தான் அரசு கேவலம்!!

Advertiesment
விமானத்திலும் ஸ்டாண்டிங்: பாக்கிஸ்தான் அரசு கேவலம்!!
, ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (11:47 IST)
பாகிஸ்தான் அரசு விமானத்தில் உட்கார இடம் இல்லாததால் பலர் நின்று கொண்டு பயணம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலிருந்து கடந்த மாதம் 20ஆம் தேதி PK-743 என்னும் அரசு விமானம் சவுதி அரேபியாவுக்கு கிளம்பியது.
 
409 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த விமானத்தில் பயணம் செய்ய 416 பேர் ஏறியுள்ளனர். மொத்த இருக்கை எண்ணிக்கையை விட ஏழு பயணிகள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் விமானத்தின் நடைபாதையில் நின்று கொண்டே சவுதி அரேபியாவின் மதீனா நகர் வரை பயணம் செய்துள்ளனர்.
 
கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தை, தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனால் பாக்கிஸ்தான் அரசை பலரும் கேலியாய் விமர்சித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள்: இல. கணேசன் சர்ச்சை பேச்சு!!