Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தை நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள்: இல. கணேசன் சர்ச்சை பேச்சு!!

Advertiesment
தமிழகத்தை நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள்: இல. கணேசன் சர்ச்சை பேச்சு!!
, ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (10:46 IST)
தமிழகத்தில் தற்போது முக்கிய பிரச்னையாக ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளது. இந்த திட்டம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என தமிழகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.


 
 
இது தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது, நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். 
 
மேலும், நாட்டின் செல்வம் பெருக, அந்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்பது இயற்கை நியதி. மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல.

இந்த திட்டம் குறித்த பிரச்சினைகளையும், அவற்றின் உண்மையான பரிமாணத்தில் பேசுவதும், விவாதிப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் நாகரீகமற்றவர்: மோதிக்கொள்ளும் ஸ்டாலின், ஓபிஎஸ்!