2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி (இன்று) நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி (இன்று) நிகழும் என்றும் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை இன்று சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க வாய்ப்பில்லை என்றும் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் சூரிய கிரகணம் தென்படும் என்று நாசா கூறியுள்ளது.
அதோடு அடுத்த கட்டமாக அக்டோபர் 25 ஆம் தேதி பகுதியளவு சூரிய கிரகணமும், நவம்பர் 8 ஆம் தேதி முழுமையான சூரிய கிரகணமும் நடைபெற இருக்கிறது. இன்று நிகழும் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் Timeanddate.com என்ற இணையதளம் இன்று சூரிய கிரகண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.