Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியா: கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (22:26 IST)
மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 

மலேசிய நாட்டில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மலேசியா நாட்டில் கொலை, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு,  கட்டாய மரண தண்டனையை நிறைவேற்ற புதிய சட்டமசோதா முன்மொழியப்படு, நீண்ட விவாதத்திற்குப் பின் இந்த புதிய மசோதா இன்று  நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக, சிறையில் உள்ள சுமார் 1300 தூக்குதண்டனை கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சட்டத்துறை இணை அமைச்சர் ராம்கர்பால் சிங், ‘மலேசியாவில் இந்த சீர்திருத்தம் என்பது குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு முக்கிய அம்சமாகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். ஆனால், குற்றங்களுக்கு தண்டனை மறுபரிசீலனை செய்யப்பட்டு, 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் என்றும், குற்றவாளிகள் தண்டனையை மறுஆய்வு செய்ய 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments