ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் சோக நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மியால் கொலை ஒன்று நடந்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு வருவதை அடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தனது தம்பியை அண்ணன் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.,
தூத்துக்குடியை சேர்ந்த நல்லதம்பி என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததோடு தனது அண்ணன் முத்துராஜிடம் ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கி அதனையும் ஆன்லைன் ரம்மியில் இழந்து உள்ளார். இதை அடுத்த வீட்டை விற்று மேலும் பணம் தரும்படி அண்ணனிடம் கேட்டதை அடுத்து தம்பி நல்ல தம்பியை அண்ணன் முத்துராஜ் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததோடு போலீசில் சரணடைந்து உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது