Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகமாற்று செயலி மூலம் பெற்றோருடன் இணைந்த இளைஞர்!

Advertiesment
முகமாற்று செயலி மூலம் பெற்றோருடன் இணைந்த இளைஞர்!
, செவ்வாய், 23 ஜூலை 2019 (21:35 IST)
சீன தேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் சுமார் 18ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது.இந்நிலையில் தற்போது எல்லோராலும் பரவலாகிவரும் முகமாற்று செயலியின் மூலமாக தன்பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது நடந்துள்ளது.
தொழில்நுட்பங்களிப் புதுமை நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் அண்மையில் புகைப்படங்களில் வயதான தோற்றத்தையும், இளைமையான தோற்றத்தையும் ஏற்படுத்தும் ஒரு செயலி பரவலாகிவருகிறது.
 
அதனால் பிரபலமானவர்கள் முதற்கொண்டு, பொதுமக்கள் வரை இந்த செயலியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி இளமை மற்றும் வரவிருக்கிற முதுமை ஆகியவற்றை பார்த்து பரவசம் அடைந்துவருகின்றனர்.
 
இந்நிலையில் சீனாவில் 3 வயதுக் குழந்தையாக இருக்கும்போது,  காணாமல் போன ஒரு நபர் பேஸ் ஆப் செயலியால் 18  ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
ஷை யு வீபெங் என்பவர் சிறுவயதில் கடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இப்படியிருக்க பேஷாப் செயலி மூலமாக அவரை கண்டறிய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர்.
 
இதனையடுத்து அவரது பால்யா கால புகைப்படத்தை தற்போதைய உருவத்திற்கு மாற்றிய அவரது பெற்றோர் தம் மகனை கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ந்தனர்.
 
பின்னர் சிறப்புப்படையினரின் உதவியுடன் நீண்ட முயற்சிக்குப் பின்னர் தனது மகனைப் பெற்றோர் கண்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தமிழ் படங்களில்’ நடித்த கவர்ச்சி நடிகைக்கு 6 மாதம் சிறை !