இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருமே தன் சந்ததியை பாதுகாத்து வளர்க்க பிரயத்தனப்படுவது இயல்பு. இந்நிலையில் சீனாவில் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தை டிராக்டர் மூலமாய் உழுதுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பறவை ஒன்று தனது முட்டை மற்றும் குஞ்சுகளை பாதுகாப்பதற்காக டிராக்டரை எதிர்த்து நின்றதுள்ளது. இதைப் பார்த்து அந்த விவசாயி பெருதும் ஆச்சரியமடைந்தார். இதை போட்டோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
நம் அண்டை நாடான சீனாவி உள்ள மன்கோலியாவில் தற்போது மழைக்கால என்பதால் அங்குள்ள விவசாயிகள் பலரும் அவவர் நிலத்தை உழுது பயிரிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஒரு விவசாயி தனது நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே ஒரு பறவை முட்டையிட்டு தன் குஞ்சுகளுடன் அங்கு இருந்ததால் டிராக்டர் சப்தத்தைக் கண்டு அது திகைத்து விட்டு. பின்னர் அந்த டிராக்டரை அது எதிர்த்துள்ளது.
இதைப் பார்த்த விவசாயி தனது செல்போனில் அந்த பறவையைப் படம் பிடித்து வெளியிட தற்போது இந்த தகவல் வைரலாகிவருகிறது.
இந்த உலகில் தன் ரத்தத்திற்கு பாதிப்பு எதாவது வரும்போது பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கும் ? என்ற கேள்வி மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயினங்களுக்குமே பொருந்தும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
உடனே அவர் டிராக்டரை வேகமாக இயக்க பறவை முன்னே வந்து தனது இறக்கைகளை விரித்து தடுத்துள்ளது.
அப்போது அந்த விவசாயி கீழே இறங்கி பார்த்தபோது அங்கு பறவையின் கூடு அதில் குஞ்சுகளும் முட்டைகளும் இருந்தது தனது சந்தையை இணைக்க வரவை போராடுகிறது என அந்தப் பறவையின் துணிச்சலைக் கண்டு அந்த விவசாயி வியந்துள்ளார்.
இந்நிலையில் தனது கேமராவில் அதன் படம் எடுத்த அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளார். இதையடுத்து பறவையின் குஞ்சுகள் பெரிதான பிறகு தான் அந்த நிலத்தை உழுவதாகவும் அந்த விவசாயி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.