அமெரிக்காவில் படித்து வரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெர்மாண்ட் என்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் மூன்று பேர் படித்து வருகின்றனர். அவர்களை திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்
பாலஸ்தீன மாணவர்கள் மூன்று பேரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அரபு மொழியில் பேசியபடி சாலையில் நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றிலிருந்து வெளியே தேஸன் ஈட்டன் என்பவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டு விட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூடு பட்ட மாணவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேஸன் ஈட்டனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். பாலஸ்தீனம் மீது உள்ள வெறுப்பால் அவர் துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.