தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70 வது சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது பாகிஸ்தான்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தான் தேசிய கொடி 400 அடி உயர கம்பத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பறக்கவிடப்பட்டது.
இதன் மூலம் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. உலகளவில் இது எட்டாவது மிகபெரிய கொடி என்று கூறப்பட்டுள்ளது.