எதிரிகள் தாக்குதல் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் எனவே கூடுதல் நிதி அளித்து உலக வங்கி உதவி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்துள்ள நிலையில் உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுவிக்க கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பொருளாதார விவகார பிரிவு உலக வங்கிக்கு அனுப்பி உள்ள செய்தியில் எதிரிகளால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கூறுகிறது, அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக கூடுதல் நிதி கொடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே படுவீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது போர் பதற்றம் காரணமாக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும் பாகிஸ்தான் பங்கு சந்தை அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்கள் போர் நீடித்தால் பாகிஸ்தான் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது