Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Advertiesment
CA Exam

Siva

, வெள்ளி, 9 மே 2025 (08:41 IST)
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
 
பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இந்திய எல்லையை நோக்கி பறந்தாலும், இந்தியாவின் உயர் பாதுகாப்பு முறை அவற்றை வானிலேயே தடுத்து அழித்தது.
 
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. சில இடங்களில் இரு பக்க ராணுவங்களும் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
 
இந்த சூழ்நிலையில், மே 9 முதல் 14 வரை நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) அறிவித்துள்ளது.
 
இது குறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி கூறியதாவது:
"நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, சிஏ தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களை பார்வையிடலாம்" என்றார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!