Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: பிரதமர் இம்ரான் கான் அழைப்பு

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (13:51 IST)
பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக நடிகரும் பாகிஸ்தான் முன்னார் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் ஆட்சி அமைத்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். 
 
இந்நிலையில், பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு...
 
இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
 
வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய முந்தைய நவாஸ் ஷெரீப் அரசால், பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments