Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா: வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா

Advertiesment
ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா: வெற்றியை நெருங்கிவிட்ட இந்தியா
, புதன், 22 ஆகஸ்ட் 2018 (06:33 IST)
இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
 
521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
 
இருப்பினும் இங்கிலாந்து அணியின் பட்லர் 106 ரன்களும், ஸ்டோக்ஸ் 62 ரன்களும் எடுத்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் பும்ராவின் அபார பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றியை கிட்டத்தட்ட தடுத்துவிட்டது. பும்ரா ஐந்து விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுக்களையும் ஷமி மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

webdunia
இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்தியா வெற்றி பெற இன்னும் ஒரு விக்கெட் வீழ்ந்தால் போதும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 210 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறும் இந்தியா