Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிடிஏ விளையாட்டை உண்மையென்று நம்பி அசிங்கபட்ட பாகிஸ்தான் தலைவர்

ஜிடிஏ விளையாட்டை உண்மையென்று நம்பி அசிங்கபட்ட பாகிஸ்தான் தலைவர்
, புதன், 10 ஜூலை 2019 (16:02 IST)
சிறுவர்கள் விளையாடும் ஜிடிஏ (GTA) வீடியோ கேமில் வரும் விபத்து காட்சியை உண்மையென நம்பி அதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு பல்பு வாங்கியிருக்கிறார் பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர் ஒருவர்.

ஜிடிஏ (GTA) எனப்படும் வீடியோ கேம் 90ஸ் கிட்ஸ் இடையே மிகவும் பிரபலம். அதன் 5வது வெர்சன் சமீபத்தில் வெளியானது. அது சம்பந்தமாக வீடியோ ஒன்று வெளியானது. அதில் விமானம் ஒன்று விமான தளத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கும். ஓடுபாதையின் குறுக்கே ஒரு பெட்ரோல் டேங்க் வண்டி நின்று கொண்டிருக்கிறது. பறக்க தொடங்கும் விமானம் ஒரு நூழிலையில் டேங்கர் லாரியை உரசி செல்கிறது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாகிஸ்தான் அவாமி த்ஹ்ரீ கட்சியின் செயலாளர் குரம் நவாஸ் “விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தப்பியது” என்றும் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த சிலர் கமெண்டுகளில் போய் இது உண்மை சம்பவம் அல்ல. வீடியோ கேமில் வரும் ஒரு காட்சி என்று சொல்லவும் உடனே பதிவை நீக்கி விட்டார்.

ஆனால் சில நெட்டிசன்கள் அதை ஸ்க்ரீன்சாட் எடுத்து இணையங்களில் பரப்பிவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக அமைச்சர் மும்பையில் கைது ! அரசியலில் பரபரப்பு