Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி! – இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertiesment
எனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி! – இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டு!
, திங்கள், 28 மார்ச் 2022 (09:35 IST)
பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றிற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் திறமையற்ற ஆட்சியே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இம்ரான் கானின் சொந்த கட்சியினரே சிலர் அவருக்கு எதிராக மாறியுள்ளனர்.

இதனால் அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 342 இடங்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க 172 உறுப்பினர்கள் தேவை. ஆனால் இம்ரான் கான் கட்சியில் 155 உறுப்பினர்களே உள்ள நிலையில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாகவும், சில நாடுகள் மறைமுகமாக எதிர்கட்சிகள் மூலமாக தனது அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபடுவதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்கு இன்னொரு அணிகலன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!