கடந்த 18 ஆம் தேதி, ஜம்மு காஸ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் தீவிரவதிகள், தாக்குதல் நடத்தியதில், 18 இந்திய ராணுவ வீரர்கள் உரிழந்தனர்.
இதை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் சூழல் உருவானது. இதற்கிடையே, ”இந்நேரம் நான் அதிகாரத்தில் இருந்திருந்தால், இந்தியாவிற்கு உடனடியாக பதிலடி கொடுத்திருப்பேன்” என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாவது, “ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து உரிய விசாரணையை இந்தியா மேற்கொள்ளவில்லை. விசாரணை நடத்தாமலேயே உரி தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டுகிறது.
ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து விவகாரங்களிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாக உள்ளது. பாகிஸ்தான் எப்போதும், போரை விரும்பவில்லை அமைதியை தான் விரும்புகிறது.” என்றார்.