Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அடிக்க முடியாமல் பயந்து ஓடிய இந்தியா: பாகிஸ்தான் தளபதி கிண்டல்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (12:16 IST)
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்து இந்திய விமானங்கள் பயந்து ஓடியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கிண்டலடித்துள்ளார்.
 
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2000 வீரர்கள் அதிரடியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும், இந்த தாக்குதலில் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாகவும் பலர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் ஒரு ஆரம்பமே என்றும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்களை அழிக்கும் தாக்குதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி தாக்குதலுக்கு பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர், பாண்டிச்சேரி முதல்வர் உள்ளிட்ட பலர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
 
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் விமானங்கள் பயந்து ஓடியது என தகவல் வெளியானது.
 
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ தளபதி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டது.  உடனடியாக பாகிஸ்தான் விமானப் படை பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானங்கள் பயந்து திரும்பிச் சென்றன. இந்த தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் இல்லை என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments