முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்தில் கடந்த 20ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது உதவியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது
இதுகுறித்து தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இம்ரான்கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.