பாகிஸ்தான் உளவு அமைப்பு பிரபல நடிகைகள், மாடல்களை உளவாளிகளக பயன்படுத்தியதாக முன்னாள் ராணுவ மேஜர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முன்னர் மேஜராக பணியாற்றிய அடில் ராஜா என்பவர் ஒரு யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் சமீபத்தில் பேசிய அவர் பாகிஸ்தானில் உள்ள பிரபல நடிகைகள் மற்றும் மாடல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு உளவாளிகளாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டு யார் பெயரையும் சொல்லாத அவர் அந்த நடிகைகளை கொண்டு சந்தேகத்திற்குரியவர்களுடன் நெருங்கி பழக செய்து உளவு வேலை பார்த்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் நடித்திருந்த நடிகைகள்தான் அடில் ராஜா சொன்ன நடிகைகள் என சமூக வலைதளங்கள் தகவல் பரவ சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அவரது இந்த கருத்து குறித்து கண்டனம் தெரிவித்துள்ள சஜல் அலி என்ற நடிகை “நமது நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியதும், அருவருக்கத்தக்கதும் ஆகும். ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது பெரும் பாவத்திற்குரியது” என பேசியுள்ளார்.
முன்னாள் ராணுவ மேஜரான அடில் ராஜா, முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர் என்பதால் புதிய அரசாங்கம் குறித்த அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும் பலர் கூறி வருகின்றனர்.