Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய எல்லையில் பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை: பெரும் பதட்டம்

Advertiesment
border
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:45 IST)
இந்திய எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பகுதியிலுள்ள எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயலும்போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
 
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கியுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
 
இதனை அடுத்து எல்லையை தாண்ட வேண்டாம் என பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை செய்தனர். ஆனால் எச்சரிக்கையை மீறி அவர் இந்திய எல்லையை நோக்கி தொடர்ந்து முன்னேறிய நிலையில் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக சுட்டனர் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்
 
இதனையடுத்து எல்லைப் பகுதியில் தீவிர சோதனையை எல்லைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு!