Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு பல கோடி ரூபாய் இழப்பா??

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (13:05 IST)
பாகிஸ்தான் நாட்டின் வான்வெளிகளை மூடியதால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோடு பகுதியிலுள்ள பயங்கரவாதிகள் முகாம் மிது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள, 11 வான்வெளிகள் மூடப்பட்டன. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மாற்று பாதையில் வேறு வான்வழிகளில் பறந்து சென்றன. தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அமைச்சர் குல்காம் சர்வார் கான் நிருபர்களிடம் பேசியபோது, இந்திய விமானப் படை தாக்குதலால் ஏற்பட்ட இந்த வான்வெளி தடையினால் வான்வெளியை மூடியபோது பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறைக்கு, 850 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், இது பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த வான்வெளித் தடை இந்தியாவிற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் கூடும் எனவும் குல்காம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments