Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்கோடா கேட்ட சிறுமி... கொன்று முட்புதரில் வீசிய போதை ஆசாமி!

Advertiesment
பக்கோடா கேட்ட சிறுமி... கொன்று முட்புதரில் வீசிய போதை ஆசாமி!
, வெள்ளி, 19 ஜூலை 2019 (12:36 IST)
பக்கோடா வேண்டும் என கேட்ட 4 வயது சிறுமியை போதை தலைக்கேறிய ஒருவன் கொன்று முட்புதரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டம் அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் ஹாலோ பிளாக் என்ற தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். 
 
அப்படி வேலை செய்பவரில் இருவர்தான் அமித். இவரது 4 வயது மகள் இஷானி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்யுள்ளார். இதனால், போலீஸில் அமித் புகார் அளித்துள்ளார். யாரு எதிர்பாராத விதமாக இஷானியின் உடல் காயங்களுடன் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் தீவிர விசாரணையை துவங்கிய போலீஸார் 4 நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையாளியை கண்டுபிடித்தனர். அமித்தின் சொந்தக்காரர் நிலக்கர் என்பவன்தான் குழந்தை கொன்றுள்ளான என்பது தெரியவந்துள்ளது. 
webdunia
நிலக்கரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் கூறியதாவது, நான் டாஸ்மாக்கில் குடித்து விட்டு, சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு இஷானி அழைத்துத்துக்கொண்டு வந்தேன். வழியில், சிறிய பாலத்தின் சுவரில் இஷானியை உட்கார வைத்து, நான் மட்டும் சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன். 
 
அப்போது இஷானி எனக்கும் பக்கோடா கொடு என்று கேட்டாள். நான் தர மறுத்ததால் அவள் என் கையை கடித்துவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த நான் அவளை அறைந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக அவள் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். 
 
இதனால் அவ்ள் காயங்களோடு துடிதுடித்து உயிரிழந்தாள். இதனால் பயத்தில் அவளது உடலை, தூக்கிவந்து சூளைக்கு பின்னாடி உள்ள முட்புதரில் வீசிவிட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
நிலக்கரின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவனை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் – பொதுமக்கள் போராட்டம் !