Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் கண்டனம், டிரம்ப் பரிந்துரையில் சறுக்கல்!

Mahendran
ஞாயிறு, 22 ஜூன் 2025 (14:54 IST)
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா  நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த சில நாட்களிலேயே இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
"இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய அணுசக்தி வசதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பிராந்தியத்தில் பதட்டங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்," என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
 
ஈரான் மற்றும் பாகிஸ்தான் நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளும் எல்லையை பகிர்ந்து கொள்வதுடன், இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் வரலாற்று வர்த்தக பாதைகளையும் கொண்டுள்ளன. ஈரானைப் போலவே, பாகிஸ்தானும் இஸ்ரேலின் தீவிர எதிரியாகவும் உள்ளது.
 
இந்த  நிலையில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது
 
டிரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என ஆசிப் முநிர் கூறிய சில நாட்களில் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவை கண்டித்துள்ளது குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments