Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

Siva
புதன், 28 மே 2025 (14:04 IST)
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஊடகங்களை சந்தித்தார். அப்போது, கடந்த மே 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற  நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது,” எனப் பெருமிதத்துடன் கூறிய அவர், காஷ்மீர், நீர்வளப் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
அதே நேரத்தில், இந்தியா தாக்குதல் மேற்கொண்டால், அதற்குப் பொருத்தமான பதிலடி தர பாகிஸ்தான் தயார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். "அமைதியை விரும்புகிறோம் என்றால், அதற்கான செயல்பாடுகளையும் நாம் எடுத்துக்காட்ட வேண்டும்," எனவும் கூறினார்.
 
இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக  இந்தியா மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பின், 4 நாட்களுக்கு கடும் பதிலடி நடந்தது.
 
இந்த தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், சர்வதேச அளவில் உதவி கோரி, இறுதியில் இருநாடுகளும் சமாதானத்தில் ஒப்பந்தமிட்டன.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்துள்ள நிலையில், "மூன்றாம் நபருக்கு இடமில்லை" என்பது இந்திய அரசின் நிலைப்பாடாகவே தொடர்கிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments